வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட
அறிவிப்பில்: வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நிலை அலுவலர்கள் இல்லாத வாக்குச்சாவடிகளில் இந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பவர்கள் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றில் பணிபுரிபவராக இருக்கவேண்டும். மருத்துவம், காவல், குடிநீர் வழங்கல், மின் வாரியம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படமாட்டார்கள். ஓய்வுபெற்ற அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம். நியமனம் கோருபவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. மேலும் அவர்கள் குறிப்பிட்ட வாக்குப்பரப்புக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும்.
நிலை அலுவலராக நியமிக்கப்படுபவர்கள் அலுவலக வேலை நேரத்துக்கு பின்னரும் விடுமுறை நாள்களிலும் நிலை அலுவலர் பணியை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 மதிப்பூதியமாக அளிக்கப்படும்.விருப்பமுள்ள நபர்கள் பெயர், வகித்து வரும் பதவி, தற்போதைய அலுவலகத்தின் முகவரி, வசிப்பிட முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண், அலுவலக தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய தகவல்களுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...