நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜர்


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள்
மட்டும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் அரியலூரைச் சேர்ந்த வேதவல்லி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலளார் சபீதா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி என். பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா  உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 2 வாரத்துக்குள் உஅர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதாக உறுதி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை 2 வாரம் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...