டி.என்.பி.எஸ்.சி., தலைவராகநவநீதகிருஷ்ணன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, தமிழக அரசின், அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்த நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு,
ஜனவரியில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை, இந்த பதவியில் தொடரலாம். அதன்படி, நடராஜ், 62 வயதை எட்டுவதால், வரும், 12ம் தேதியுடன், தேர்வாணைய தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால், கடந்த சில நாட்களாக, புதிய தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று, தேர்வாணையத்தின் புதிய தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, கவர்னர் ரோசையா, நேற்று வெளியிட்டார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வரும் அவர், அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளாõர். புதிய பதவியை, வரும், 12ம் தேதி ஏற்பார் என, தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 1956, மே 18 ல் பிறந்தார். பி.எஸ்சி., - பி.எல்., படித்து, 1981ல், வழக்கறிஞராக பதிவு செய்து, 27 ஆண்டுகளாக, "பிராக்டீஸ்' செய்து வருகிறார். 2001-04 வரை, கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். 2004-08 வரை, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக பதவி வகித்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததும், தமிழக அரசின், அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மீதான பல்வேறு வழக்குகளில், அவரது தரப்பு வழக்கறிஞராக, நவநீதகிருஷ்ணன் ஆஜராகி உள்ளார். இவருக்கு, தற்போது, 57 வயது ஆகிறது. எனவே, தலைவர் பதவியில், ஐந்து ஆண்டுகள் வரை தொடர்வார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...