உண்டு உறைவிடப் பயிற்சி மையம் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 2013-14-ஆம் நிதியாண்டில் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர் பி. முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பள்ளி செல்லாக் குழந்தைகள் உட்கூறின் கீழ், பள்ளி வயதுடைய பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மையங்கள் (தநபஇ) தொண்டு நிறுவனங்கல் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
2012-13-ஆம் நிதியாண்டில் நடைமுறைப்படுத்துகின்ற தொண்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்த காலம் 31.03.2013-வுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து,  2013-14-ஆம் நிதியாண்டில் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி(தநபஇ) மையங்களை நடத்துவதற்காக கீழ்காணும் தகுதிகளை உடைய தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: தொண்டு நிறுவனம் டிரஸ்ட் சட்டம் அல்லது சொசைட்டி பதிவு சட்டத்தின் படி முறையாக பதிவு செய்து நடைமுறையில் இருக்க வேண்டும். இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி உணவு, இருப்பிட வசதி, கற்றல் கற்பித்தல் வசதிகளை அளிக்க வேண்டும்.
கல்விசார் பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கான தணிக்கைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
50 முதல் 100 வரை மாணவர்கள் (ஆண், பெண்) பாதுகாப்புடன் தங்குவதற்குரிய இடவசதி அளிக்க வேண்டும். கட்டடம் உறுதித் தன்மையுடன் பாதுகாப்பு மற்றும் காற்றோட்ட வசதிகளுடன் இருக்க வேண்டும். கழிவறை, குளியறை வசதிகள் போதுமானதாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்க
வேண்டும்.
இதுவரை எவ்வித புகார்களும் இடமளிக்காமல் பணியாற்றி இருக்க வேண்டும். இற்கான விண்ணப்பப் படிவம், விழுப்புரம் மருத்துவமனை வீதி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ஆம் தேதி மாலை 5.45-க்குள் அளிக்க வேண்டும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...