எச்சரிக்கையாய் இருங்கள்!!! -பொதுச்செயலாளர் கடிதம்.

ஒரு முறை அல்ல ,இரு முறை அல்ல தொடர்ந்து தவறான SMS களை மட்டுமே அனுப்பி  வரும் ஒரு கூட்டத்தினர் தற்போது நமது இயக்கத்தின் செயல்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நம் மீது பல கண் உண்டு.
இது வரை  இடைநிலை ஆசிரியர்களை பற்றி,சம்பளம் பற்றி
வந்த எந்த செய்தியாவது நடந்ததா? என்றால் ,அது உங்களுக்கே தெரியும்.இதற்கிடையில் நமக்கு  பலரின் மூலம் தூது,மிரட்டல்கள் தொடர்ந்து விடுத்துக்கொண்டுதான் உள்ளனர்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றவுடன்,SMS என்கின்ற ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆகையால் எப்படியும் பணிமாறுதலிலும்,ஊதிய முரண்பாட்டை களைவதிலும்  எப்படியும் ,வெற்றி பெற்று விடுவார்கள் என்று எண்ணி அதன் மூலம் பிரபலம் ஆகிவிடுவார்களோ !!! என்ற அச்ச உணர்வின் காரணமாக நடக்காத செய்திகளை SMS ஆக அனுப்புகின்றனர்.

உதாரணம்:

*1 1/2 ஆண்டுகளுக்கு முன் 2009 க்குப்பின்னர் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கிடைத்துவிட்டது மாவட்ட கல்வி அதிகாரியிடம் சென்று பணிமாறுதல் ஆணை வாங்கிக்கொள்ளுங்கள் என்றனர்.நாம் வாங்கி விட்டோமா ? அதுபோல் நடந்து விட்டதா ?
*இதுவரை மாவட்ட மாறுதல் வழக்கில்,அரசு சார்பாக விரைந்து வழக்கினை முடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை .*இதுவரை பதிமூன்று  முறை விசாரணைப்  பட்டியலில் இருந்தும்,விசராணைக்கு அரசு தரப்பில் எந்தவித முயற்சியும்,மேற்கொள்ளப்படவில்லை.

*இப்போது நாம் பலமுறை அமைச்சர்கள்மற்றும் அதிகாரிகளை சந்தித்த போது, நாங்களும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றோம்,இருந்தாலும் நீங்களும் ஒரு மூத்த வழக்கறிஞரை வைத்து உங்களால் முடிந்த முயற்சியினை  எடுங்கள்!!!என கூறியதன் பெயரிலேயே எடுக்கப்பட்ட முடுவுதான் நம் முடிவு.


*இடைநிலை ஆசிரியர்களுக்கு  9300-4200 சம்பள விகிதமாக மாறிவிட்டது,அதற்கான கடிதம் எங்களிடம் உள்ளது ,என்றனர் ஏன் இதுவரை அந்த கடிதத்தினை வெளியிடவில்லை?அது அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதோ !!!
*10,20,30 ம் தேதி என மாதத்தில் உள்ள அத்தனை  தேதிகளையும் கூறி அப்பொழுது மாறிவிடும்,இப்பொழுது மாறிவிடும் என்று தொடர்ந்து முரண்பாடாகவே,பேசி வரும்  இவர்கள், இப்போது எங்கள் உழைப்பை சுரண்டப்பார்க்கின்றனர்.இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது நாம் மட்டும்தான் ,நமக்கு மட்டுமே அவர்களைப்பற்றி நன்றாக தெரியும்.தற்போது புதிதாக பணியில் சேர்ந்தவர்களை குறி வைத்து,அம்பினை  எய்கின்றனர்.பல மாவட்டங்களில் அதிகமான பணம் வசூல் செய்து இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை.எந்த அமைப்பில் எது செய்தாலும் குழப்பி ஒன்றுமில்லாமல் செய்வதே அவர்கள் எண்ணம்.உழைக்காமல் கிடைக்கும் எதுவுமே,நிச்சயமாக,  நிச்சயமாக , நிச்சயமாக, நிச்சயமாக ,நிரந்தரமே கிடையாது!!!என்பதில் நானும் எங்கள் இயக்க உறுப்பினர்களும்,தலைவர்களும் உறுதியாக உள்ளோம்.
*நம் வழக்கினை கடந்த ஆண்டே மூத்த வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.இதே போன்று தொடர்ந்து செய்வதால் ஒரு சிறு பாதிப்பு கூட அவர்களுக்கு இல்லை!!!ஏன் என்றால்,அவர்களில் யாரும் நம்மைபோன்று 2009 க்குப்பின் நியமனம் பெற்றவர்கள் இல்லை என்பதுதான் உண்மை !!!நமது வாழ்க்கையை ஒரு விளையாட்டு மைதானமாக கருதி விளையாடுகின்றனர்.நாம் 4 ஆண்டுகளாக அனுபவிக்கும் வேதனையை அவர்கள் எப்படி அறிவர்?

*இது போன்ற தவறான வதந்திகளை கண்டும் காணாமல் இருந்துவிடுங்கள்.விளக்கம் கேட்க்காதீர்கள்!!!

*இயக்கத்தின் இமையங்களே!!! நாம் அனைவரும் ஒற்றுமையாக அணியில் திரள்வோம் !!இழந்ததை பெறுவோம் !!!அது வரை கடுமையாக கற்பித்தல் கடமையுடன்,சேர்த்து உரிமைக்காகவும் பாடுபடுவோம்!!!
*உங்கள் முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் !!!இந்த ஆண்டிற்குள் முடிந்தவரை மாவட்ட மாறுதலையும், சம்பள தீர்வினையும் பெற்றே தீருவோம் என உறுதிபட தெரிவிக்கிறேன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...