டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: வரலாறு வினா - விடை

பண்டைத் தமிழகம்
*   உலகிலேயே மிகமிகத் தொன்மையானது என்று வரலாற்று அறிஞர் கூறும் பகுதி - விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதி.
*   திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள் பேசும் மொழி - தமிழ்.
*   வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று கூறிய முனிவர் - பவணந்தி முனிவர்.
*   வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று கூறப்படும் நூல் - நன்னூல்
*   நன்னுலின் ஆசிரியர் -
பவணந்தி முனிவர்.
*   ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி - சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது.
*   சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1967.
*   சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் - அறிஞர் அண்ணை.
*   1967-ல் தமிழகத்தின் முதல்வர் - அறிஞர் அண்ணா.
*   செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் - தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.
*   தமிழ்நாடு எந்த மரபுவழி மாமன்னர்களால் பண்டைக் காலம் முதல் ஆளப்பட்டு வந்ததது -  மூவேந்தர்கள் எனப்பட்ட சேர, சோழ, பாண்டியர்களால்.
*   தென்னாட்டின் தென் பகுதியை ஆண்டவர்கள் -  பாண்டியர்கள்.
*   மேற்குப் பகுதியை ஆண்டவர்கள் - சேரர்ரகள்
*   வடகிழக்குப் பகுதியை ஆண்டவர்கள் - சோழர்கள்.
*   வரலாற்றுக் காலத்திற்கு முன்னர், குமரிமுனைக்குத் தெற்கே உள்ள கடல்பகுதி ஒரு பெருநிலப்பரப்பாக இருந்தது. அதைக் குமரிக் கண்டம் என்பர் புலவர்.
*   குமரிக்கண்ட நிலப்பரப்பில் ஒடிய ஆறு - பஃறுளியாறு
*   பாண்டியர் தலைநகர் - தென்மதுரை
*   தமி்ழ் வளர்த்த தலைச் சங்கம் கூடியது - தென்மதுரை
*   கடலில் மூழ்கிய பண்டைய பாண்டியர்களின் தலைநகரங்கள் - தென்மதுரை, கபாடபுரம்
*   இடைச்சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகர் - கபாடபுரம்
*   தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் மதுரை மூதூரில் நடைபெற்றது.
*   மதுரை மூதூரில் பாண்டிய மன்னர் தலைமையில் புலவர்கள் கூடித்தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால், இந்நகரம் கூடல் என்றும் பெயர் ரெற்றது.
*   மனித இனம் முதலில் எங்கு தோன்றியிருக்க வேண்டும், அங்கு மூலமொழியாக எந்த மொழி இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் - குமரிக்கண்டம், தமிழ்
*   லெமூரியக்கண்டம் என பெயர் வரக் காரணமாக இருந்த விலங்கு - லெமூர் என்ற குரங்கு
*   குமரிக் கண்டத்திற்கு முன்னதாக ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் இணைக்குமாறு இருந்த கண்டம் - லெமூரியக்கண்டம்.
*   தமிழ்நாட்டைக் குறித்து அறியக் கூடிய வரலாற்றுக் காலம் சங்ககாலத்தில் தொடங்குகிறது.
*   சங்க காலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் அவ்வப்போது கூடித் தமிழ் ஆய்வு செய்த காலம்.
*   சங்க காலம் - தி.மு.200 முதல் தி.பி.200 வரை 400 ஆண்டுகள் (அல்லது) தி.மு.300 முதல் தி.பி 300 வரை.
*   திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்களின் கருதும் ஆண்டு கி.மு. 31 ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும்.
*   தற்காலத்தில் சங்க இலக்கியங்களாகக் கிடைத்துள்ள நூல்கள் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
*   தொல்காப்பியம் - கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழின் பெருமைக்கு அடையாளமாக அரும்பெரும் இலக்கண நூலாக விளங்கியது.
*   சங்க காலத்திலேயே அனைத்துச் சமயத்தாரும் வியந்து போற்றும் திருக்குறள் தோன்றி இருக்கிறது என்பது தமிழுக்குத் தனிப்பெருமை.
*   வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று கூறியவர் - தேசியகவி பாரதியார்.
*   தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் - செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது.
*   பிறமொழிகளின் துணை தேவையின்றியே தமிழ் வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழை - உயர்தனிச் செம்மொழி என்று அறிஞர்கள் குறிப்பிடுவர்.
*   தமிழகம் - எகிப்து, யவனம், ரோம், சீனம் போன்ற நாடுகளுடன் பண்டமாற்று வணிகம் செய்து வந்தது.
*   சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் நிலத்தை ஐந்து இயற்கைப் பிரிவாகப் பிரித்து வழங்கினர்.
*   மலைகளும் அது சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பட்டது.
*   கடலும் கடற்கரைப் பகுதியும் நெய்தல் எஎனப்பட்டது.
*   நீர்வளத்துடன் வயல் சூழ்ந்த பகுதி மருதம் எனப்பட்டது.
*   கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலப்பகுதி பாலை எனப்பட்டது.
*   உழவுத் தொழில், உலகோர்க்கு உணவளிக்கும் உயர்ந்த தொழிலாக மதிக்கப்பட்டது.
*   யானோ அரசன்? யானே கள்வன்! என்று கூறி வளைந்த தன் செங்கோலை நிமிர்த்துமாறு உயிர் நீத்த மன்னன் - பாண்டியன்  நெடுஞ்செழியன்.
*   சோழ மரபில் வந்தவர்களுள் புகழ்மிக்கவர்கள் - கரிகாற் பெருவளத்தான், கிள்ளிவளவன்
*   ஈழத்தை வென்று, அந்நாட்டவரின் கைதிகளைக் கொண்டு காவிரி நதிக்குக் கரைகட்டியவர் - கரிகாற் பெருவளத்தான்.
*   இடைக்காலத்தில் வாழ்ந்த இராசராசசோழன், இராஜேந்திரசோழன் வடபுலத்தை மட்டுமன்றி ஜாவகம், கடாரம் முதலான கீழ்த்திசை நாடுகளையும் வென்றனர்.
*   கடையெழு வள்ளல்கள் - பாரி, ஓரி, காரி, நள்ளி, எழினி, பேகன், ஆய்
*   திருகோவில்கள் கட்டும் முறை வளராத அக்காலத்தில், சங்ககால மக்கள் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நடுகல்லையும், தமது முன்னோர்களையுமே வழிபட்டனர்.
*   சங்ககால மக்கள் அறுவடை விழா, பொங்கல் விழா, இளவேனில் பருவ விழா, இந்திர விழா போன்ற விழாக்களைக் கொண்டாடினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...