நுகர்வோர் உரிமைச் சட்டத்தை அனைவரும் அறிய வேண்டும்

நுகர்வுச் சந்தை முறைகேடுகளை நீக்க, நுகர்வோர் உரிமைச் சட்டம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஹெச்.இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டி
சார்பில், சேலம் சாரதா கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அந்த கமிட்டியின் தலைவர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஹெச்.இளங்கோவன் பேசியது:
நுகர்வோர் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வழிகளில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நுகர்வோர் அமைப்புகள் இதற்கு பலமாக இருந்து அந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலும், நுகர்வு சந்தையில் தனிமனிதன் பாதிக்கப்படும் போது, சட்டத்தின் மூலம் அதற்கானத் தீர்வை ஏற்படுத்தி தர நுகர்வோர் அமைப்புகள் முன்வர வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் புகார் தெரிவித்தால், அவர்களது குறைகள் தீர்த்து வைக்கப்படும்.
பொருள்களை அளவீடு செய்வதற்கு, சந்தையில் நவீன எடை அளவு கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், அதில் முறைகேடு நடைபெறுகிறது. எனவே, முறைகேடுகளை நீக்க நுகர்வோர் உரிமைச் சட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். இந்தச் சட்டம் குறித்து மக்களிடம் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
விழாவில், எடை அளவு மோசடி குறித்து மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் கே.வெங்கடேசன் செயல்முறை விளக்கம் அளித்தார். பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் மூலம் தீர்வு பெறலாம் என்பது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியின் தலைவர் எஸ்.செல்வம் விளக்கினார்.
ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சி.ஜனகவள்ளி முன்னிலை வகித்தார். கல்லூரியின் இணைப் பேராசிரியை த.நாகவள்ளி வரவேற்றார். விழாவின்போது, நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  
விழாவில், நுகர்வோர் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜி.இக்பால், மாநகர் மாவட்ட இணைச் செயலர் எஸ்.முத்துக்குமார், மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.செந்தில்குமார், செயலர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...