"கேட்' தேர்வு முடிவு வெளியீடு

ஐ.ஐ.டி.,க்களில், எம்.டெக்., படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு (கேட்) முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், பயோ-டெக்னாலஜி பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த தீபா ராஜகோபாலன், இந்திய அளவில், முதலிடத்தை பிடித்தார். ஐ.ஐ.டி.,க்களில், எம்.டெக்.,
படிப்பில் சேர, ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு ஐ.ஐ.டி., இந்த தேர்வை நடத்துகின்றன. நடப்பு ஆண்டுக்கான தேர்வை, மும்பை ஐ.ஐ.டி., கடந்த பிப்., 10ல் நடத்தியது; 9.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, நேற்று வெளியானது.
இதில், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை, பயோ-டெக்னாலஜி, இறுதியாண்டு மாணவி தீபா ராஜகோபாலன், 80 மதிப்பெண்கள் பெற்று, இந்தப் பிரிவில், நாட்டில் முதல் இடத்தை பிடித்தார். இந்த பிரிவில் மட்டும், 16,159 பேர், தேர்வு எழுதினர். சென்னையைச் சேர்ந்த, அசோக் சுதாகர் என்ற மாணவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், அகில இந்திய அளவில், 54வது இடத்தை பிடித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...