அமைச்சர் கபில்சிபல் தகவல் நாடு முழுவதும் இலவச ரோமிங் அக்டோபருக்குள் அமலாகும்


நாடு முழுவதும் இலவச ரோமிங் திட்டத்தை அக்டோபர் மாதத்துக்கு முன்பாக தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். செல்போன் பயன்படுத்துபவர்கள், சொந்த
மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்று அதை பயன்படுத்தினால், இன்கமிங் கால்களுக்கும் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை முற்றிலும் நீக்கும் வகையில், நாடு முழுவதும் எங்கிருந்து பேசினாலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) திட்டம் வகுத்துள் ளது. அதாவது ரோமிங் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், வெளிமாநிலங்களுக்கு செல்லும்போதும், சொந்த மாநிலத்தில் இருக்கும் கட்டணத்திலேயே எல்லா இடங்களுக்கும் பேசலாம். வரும் அழைப்புகளையும் இலவசமாக பெறலாம். இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச் சர் கபில்சிபல் அளித்த பேட்டியில், ‘‘இலவச ரோமிங் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆவணங்களை, தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆணையம் பரிந்துரை களை அளித்தவுடன், அக்டோபர் மாதத்துக்கு முன்னதாகவே இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...