மேல்நிலை வரைவு பாடத்திட்டம்: ஏப்ரலில் இணையத்தில் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டம், அடுத்த மாதம், இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பிளஸ் 1க்கு, 2014-15ம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2வுக்கு, 2015-16ம் கல்வி ஆண்டிலும், புதிய பாடத்திட்டங்கள், அமலுக்கு வருகின்றன. இதற்காக,

புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, பாட வாரியாக, வரைவு பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை, கடந்த மாதம், 13ம் தேதி, இணையதளத்தில் வெளியிட, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுருந்தது. ஆனால், இறுதிக் கட்ட பணிகள் முடியாததால், வெளியிடவில்லை. தற்போது, பொதுத்தேர்வு பணிகளில், அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், இந்த மாதமும் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, ஏப்., 15ம் தேதிக்குப் பின், வரைவு பாடத்திட்டம், இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதன்பின், கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர் உட்பட, அனைத்து தரப்பினரிடமும் இருந்து, கருத்துக்களை பெற்று, அதனடிப்படையில், தேவையான மாற்றங்களை செய்து, பாடத்திட்டத்தை இறுதி செய்ய, நிபுணர் குழு திட்டமிட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...