மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் புத்தகம்

ராமநாதபுரம்:பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்த புத்தகம் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெப்பம் அதிகரிப்பு, ஓசோன் படலம் பாதிப்பு, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, பள்ளி மாணவர்கள் அறிந்து
கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் தமிழ், அறிவியல், கணிதம் உள்ளிட்ட மன்ற செயல்பாடுகள் குறித்தும், மரக்கன்று நடுதல் அவசியம் பற்றியும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த புத்தகம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேச பாண்டியன் கூறியதாவது:உலகம் வெப்பம் ஆவதால், பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சுற்றுச்சூழலை பேணி காக்க, பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும், மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து நன்கு தெரிந்து கொள்ளும் வகையில், 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான புத்தகம் தனியாக வழங்க வேண்டும். அப்போது தான், அவர்கள் மேலும், பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும், என்றார்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...