நிரந்தர பணியிடங்களில் நியமனம் தற்காலிக பணியாளருக்கு சலுகை

நீதித்துறையில்வரும் காலத்தில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும்போது தற்காலிக பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சியை சேர்ந்த
பானுமதி உட்பட 21 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:நாங்கள் நீதித்துறை சார்நிலை பணியாளர்களாக தற்காலிக அடிப்படையில் கோர்ட்டுகளில் பணிபுரிகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு அளித்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் இடங்களில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெறுபவர் களை நியமிக்க முயற்சி நடக்கிறது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்து அதே இடங்களில் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா ஆகியோர் விசாரித்தனர். நிரந்தர பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் நியமிக்கும்போது, அந்த இடங்களில் தற்காலிகமாக பணிபுரிந்து வருபவர்கள் விடுவிக்கப்படுவது வழக்கம். தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோர முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் காலிப்பணியிடம் உருவாகும்போது மனுதாரர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு வயது வரம்பு தளர்வு சலுகை வழங்கி, முன்னுரிமை அளிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...