விலை உயர்வு எதிரொலி: போட்டி தேர்வு "கைடு'கள் இரு மடங்கு விலை உயர்வு


தமிழகத்தில் பேப்பர் விலை உயர்வை காரணம் காட்டி, போட்டித் தேர்வுகளுக்கான, "கைடு'களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு கைடுகளின் விலையை, இருமடங்காக
உயர்த்தியுள்ளன.
தமிழகத்தில் செயல்படும் பேப்பர் மில்கள், மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பேப்பர் தயாரிப்புக்கான, மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக, பேப்பர் மில்கள், தங்கள் தயாரிப்பு பேப்பரின் விலையை, ஜனவரி மாதத்துக்கு பின், மாதம் தோறும் விலையேற்றம் செய்து வருகின்றன. இதன் காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான கைடுகளை தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு கைடுகளின் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன.
"குரூப் 1': இந்நிறுவனங்களின் சார்பில், தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப், 1, 2, கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு, ரயில்வே, காவல், தீயணைப்பு, சிறைத்துறை பணியாளர்கள் தேர்வு. ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வு, ஆசிரியர் பயிற்சி ஆயத்த தேர்வு என, அரசால் அறிவிப்பு செய்யப்படும் போட்டி தேர்வுகளுக்கு, கைடுகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றன. கடந்த, 2012 டிசம்பர் மாதம் வரை, இந்நிறுவனங் களால், தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்ட கைடுகள், குறைந்த பட்சம், 170 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 305 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது, இந்நிறுவனங்கள், பேப்பர் விலை உயர்வை காரணம் காட்டி, தங்களின் தயாரிப்பு கைடுகளின் விலையை, இருமடங்காக, அதிகரித்துள்ளன. 400 ரூபாயில் துவங்கி, 605 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, புத்தக கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பேப்பர் விலை உயர்வு, மறுக்க முடியாத ஒன்று தான். ஆனால், கைடுகளை தயார் செய்யும் நிறுவனங்கள், கிரேடு -1 பேப்பரை பயன் படுத்துவது இல்லை. தரம் குறைந்த பேப்பர்களையே பயன்படுத்துகின்றன.
விலை ஏற்றம்: முன் அட்டை, அதாவது ரேப்பர் மட்டுமே பள பளப்பு தாளில் பிரின்ட் செய்யப்படுகிறது. தரம் குறைந்த பேப்பரில் தயார் செய்யும், இந்நிறுவனங்களின் கைடுகளின் தயாரிப்பு செலவு, 90 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது. பள்ளி பாட புத்தகங்களை, இலவசமாக அரசு வழங்கியதால், ஏற்பட்டு உள்ள இழப்பை, கைடுகளின் விற்பனை மூலம் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கில் கைடு நிறுவனங்கள் தங்களின் மனம் போல் விலை ஏற்றத்தை அரங்கேற்றி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...