அறிவியல் கண்காட்சி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கோரைக்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தாமரை வசந்தா பேரணி மற்றும்
அறிவியல் கண்காட்சியை தொடக்கிவைத்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராசாத்தி வாழ்த்திப் பேசினார்.மாணவர் பேரணி கோரைக்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி கிராமத்தின் அனைத்து வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. அறிவியல் கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, தொழிற்சாலை புகையால் ஏற்படும் தீமைகள், குடிநீர் சுத்திகரிப்பின் அவசியம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல்  உள்ளிட்ட மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நடராஜன், உமா, வானதி, இளையராஜா, பேபி ராணி மற்றும் சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் சொ. மனோகரன் வரவேற்றார். ஆசிரியர் எஸ். நடராஜன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...