தனியார் பள்ளி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து: அரசு தேர்வுத்துறை இயக்குனர் நடவடிக்கை

நாமக்கல் அருகே, ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை, பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கான தேர்வு துவங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை கண்காணிக்க, கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 12ம் தேதி, இயற்பியல் தேர்வின் போது, நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு, இணை இயக்குனர்கள் கார்மேகம் தலைமையிலான அதிகாரிகள், ஆய்வுக்காக சென்றனர். பள்ளி வளாகத்தில் இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய பதில் எழுதிய அட்டைகள், பள்ளி வளாகத்தில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர். அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், பள்ளியில் இருந்த முதன்மை மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம், விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மைய அங்கீகாரத்தை அரசு தேர்வுத் துறை இயக்குனர், ரத்து செய்து அறிவித்துள்ளார். இனி நடக்கும் ப்ளஸ் 2 தேர்வை, அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுத வேண்டும் எனவும், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர், கார்மேகம் கூறுகையில், ""சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மையத்தை மாற்றி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடை எழுதிய அட்டைகள் கிடந்தது தொடர்பாக, விசாரணையும் நடந்து வருகிறது,'' என்றார்.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கூறியதாவது: சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், 404 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அந்தப் பள்ளியின் தேர்வு மையத்தை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே அப்பள்ளி மாணவ, மாணவியர் இனி வரும் தேர்வுகளை செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுதுவர். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வும் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடக்காது. வேறு பள்ளியில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...