கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டு

இன்றைய இளைய சமுதாயத்தினர் தாங்கள் கற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.குணசேகரன் கேட்டுக்கொண்டார்.
 வேலூர் ஊரிசு கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு நிறைவு செய்த 650 மாணவ, மாணவியருக்கு பட்டமளித்து குணசேகரன் உரையாற்றியது:
அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க இளையதலைமுறை புதிய முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை ஒரு அறிவுசார்ந்த செல்வ நாடாக மாற்ற தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற நாடுகளுடன் போட்டியிட உயர்கல்வியில் நாம் இன்னும் மேம்பட வேண்டும்.
மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை நாம் கண்டறிய வேண்டும். இதற்கு உழைப்பும், ஊக்கமும் போதுமானது.
உலகில் நாம் சிறந்த மனிதவளத்தை பெற்றுள்ளோம். அதுதான் இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும், தொழில் வளர்ச்சிக்கும், நாளைய கண்டுபிடிப்புகளுக்கும், முன்னேற்றத்துக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
வாழ்வில் வெற்றியையும், தோல்வியையும் சமமாக எதிர்கொள்வதற்கு நேர்மறை எண்ணங்களை இளைய தலைமுறை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் குணசேகரன்.
கல்லூரி முதல்வர் ஏ.அருளப்பன், சிஎஸ்ஐ பிஷப் ஏ.ராஜவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...