அரசுப் பள்ளிகளில் ஒலி-ஒளி காட்சி வகுப்புகளை அதிகப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

கற்றல் குறைபாடுகளைத் தவிர்க்க, ஒலி-ஒளி காட்சி வகுப்புகளை  அதிகப்படுத்துமாறு, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு சென்னை  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவர் எஸ். விஜயராஜேந்திரன் தாக்கல்
செய்த மனுவை  விசாரித்த நீதிமன்றம், இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
 ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு  வரை படிக்கும் பள்ளி மாணவர்களிடையே கற்றல் குறைபாடு பரவலாகக் காணப்படுகிறது.
   அத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 கற்றல் குறைபாடு இருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு, டிஸ்லக்சியா என்ற  நரம்பியல் குறைபாடு காரணமாக இப் பிரச்னை ஏற்படுகிறது.
 இது தீவிரமடையும் நிலையில் படிப்பதற்கும், வாசிப்பதற்கும், பாடம் நடத்தும்போது குறிப்பு எடுப்பதற்கும் இயலாத நிலையை அடைகின்றனர். இத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிப்பது அவசியமாகும். அவர்களுக்கு தேர்வுகளில் கூடுதல் நேரம் ஒதுக்குவது, பாடம் நடத்துவதை குறிப்பு எடுப்பதற்குப் பதிலாக ஆடியோவில் பதிவு செய்து கொள்ள அனுமதிப்பது, ஒலி-ஒளிக் காட்சிகள் மூலம்  பாடங்களை நடத்துவது உள்ளிட்டவற்றை, இத்தகைய மாணவர்களுக்காக செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர்  அடங்கி அமர்வு, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறியவதற்கான நடைமுறையைப் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டனர்.
   மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒலி-ஒளி காட்சி வகுப்புகளை அதிகப்படுத்துமாறும் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...