CCEக்கு மாதிரி வகுப்பறை அமைத்து அசத்தும் அரசுப் பள்ளி


கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பல்வேறு புதுமைகளைப் புகுத்தி மாணவர்களை முன்னேற்றுவதில் முழுமூச்சாய் இ
யங்கிக் கொண்டுவருகிறது.
தவறாது சமூக விழிப்புணர்வு விழாக்கள் கொண்டாடுதல், “ஸ்மார்ட் கிளாஸ்” வடிவமைப்பு, மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் என இப்பள்ளியின் சிறப்பான வெற்றிகளின் வரிசையில் தற்போது இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் “CCE மாதிரி வகுப்பறை” தனியார் பள்ளியின் வகுப்பறைகளுக்கு சவால் விடும் வகையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வளரறி செயல்பாடுகளை காட்சிப்படுத்த வண்ணப்பலகை, மனவரைபடத்தை காட்சிப்படுத்தும் தாங்கிகள் (MIND MAP STANDS) மற்றும் மெருகேற்றப்பட்ட உள்கட்டமைப்பு என இவ்வகுப்பறை அனைத்து அதிகாரிகளையும் கவர்ந்துள்ளது.

அரசுப்பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது இல்லை என்பதை உணர்த்தி, எங்கள் பள்ளியில் வரும் கல்வியாண்டில் சேர்க்கை சதவீதத்தினை உயர்த்துவதே எங்கள் நோக்கம் என இப்பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...