10ம் வகுப்பு கணிதத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்: "புளு பிரின்ட்' மாறியதால் உத்தரவு

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண்
வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஐந்து மதிப்பெண் பகுதியில், "தொடர்கள் - தொடர்வரிசை' பாடத்தில், இரு கேள்விகள் இடம் பெற வேண்டும்; ஆனால், ஒரு கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது. "இயற்கணிதம்' பாடத்தில், மூன்று கேள்விகளுக்கு பதில், இரு கேள்வியும்; "அணிகள், முக்கோணவியல்' பாடங்களில், ஒரு கேள்விக்கு பதில், இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதேபோல், "கணங்களும் சார்புகளும்' பாடப் பகுதியில், இரண்டு கேள்விகளும், "சார்புகள்' பகுதியில் இருந்து மட்டும் இடம்பெற்றன. அதிலும் ஒன்று, "கிரியேட்டிவ்' கேள்வியாக அமைந்திருந்தது. இக்கேள்வி அமைப்பால், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பது மட்டுமின்றி, பல மாணவர்களின், நூற்றுக்கு நூறு கனவும் தகரும் என, கருத்து எழுந்தது.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் அனைத்து மைய கண்காணிப்பாளர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய உத்தரவு: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு பிரிவு, 3ல் உள்ள, அணிகள், முக்கோணவியல் பாடப்பகுதியில், ஒரு வினாவிற்கு பதில் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டதால், பிரிவு 3ல் உள்ள அனைத்து வினாக்களையும் மதிப்பீடு செய்து, அதில், மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற, இரு வினாக்களை தேர்வு செய்து, அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வு முடிந்ததும், இப்பிரச்னை குறித்து பள்ளிக் கல்வித் துறை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இதற்கு மதிப்பளித்து, அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...