பாலர் நேசன் பள்ளியின் 117-வது ஆண்டு விழா

உத்தரமேரூர் மிஷின் ஸ்கூல் தெருவில் அமைந்துள்ள பாலர் நேசன் நடுநிலைப்பள்ளி 117-வது ஆண்டு விழா அண்மையில் நடந்தது.
பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் அ.சுந்தர் தலைமை
தாங்கினார். பேரூராட்சி மன்றத் தலைவர் கு.சுமதிகுணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி கே.ஜம்ருத்பீ, மேலாண்மை குழுத் தலைவர் ஆர்.ஜானகி முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் டி.சந்திரன் வரவேற்றார். தலைமை ஆசிரியை பி.கிறிஸ்டினாள் ஜெபமணி ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினார். பள்ளி முன்னாள் பி.டி.ஏ. தலைவர் கோ.சந்தானகிருஷ்ணன், ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியர் லில்லிமேரி புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். பட்டதாரி ஆசிரியை பி.ஏ.அற்புதமேரி நிகழ்ச்சிகளை தொகுப்புரையாற்றினார். தொழிற்கல்வி ஆசிரியர் அ.அருளானந்தன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...