வி.ஐ.டி., பல்கலை கழக நுழைவுத் தேர்வு : 1.67 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, "விட்டி - 2013' இம்மாதம், 15ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில்,
112 நகரங்களில், 130 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. "ஆன்-லைன்' மூலமாக, 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 978 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கூறியதாவது: வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில் (வேலூர் வளாகம்) 2013-14 ம் ஆண்டுக்கான, பி.டெக்., சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், கெமிக்கல் உள்ளிட்ட, 13 பி.டெக் பொறியியல் பட்ட படிப்பிலும், சென்னை வளாகத்தில், பி.டெக் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகளிலும் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, இம்மாதம், 15ம் தேதி தொடங்குகிறது.
துபாய், குவைத் நாடுகளிலிருந்தும், நாட்டின், 31 மாநிலங்களில் உள்ள, 112 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள, 130 மையங்களில், ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 978 மாணவ, மாணவியர் பங்கேற்று, நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். நுழைவுத்தேர்வு, "ஆன்-லைன்' முறையில், கணினி உதவியுடன் நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வில் பங்கேற்றவர்கள், பி.டெக் பட்டப் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங், மே மாதம், 13ம் தேதி முதல், 18ம் தேதி வரை, ரேங்க் அடிப்படையில், வேலூர் மற்றும் சென்னை வளாகத்தில், ஒரே நேரத்தில் நடைபெறும். மேல்நிலை இறுதி தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர், வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில் சேரும் போது, அவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தில், முழுமையாக சலுகை வழங்கப்படுகிறது.
கிராமப்புற மாணவ, மாணவியர், வி.ஐ.டி.,யில் இலவசமாக உயர்கல்வி பயில்வதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் படித்து, மேல்நிலைத் தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெறும், ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் இலவச அட்மிஷன் வழங்கப்படும். அவர்களுக்கு, உணவு மற்றும் விடுதி வசதி இலவசம். இவ்வாறு ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...