பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் 62 வது வினாவில் குழப்பம் : முழு மதிபெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு
உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வில், இயற்பியல் தேர்வு மார்ச், 11ம் தேதி நடந்தது. கேள்விகள் சற்று குழப்பமாக இருந்ததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இயற்பியல் தேர்வில், பகுதி 3ல், 12 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதில், 7 வினாக்களுக்கு விடை தர வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும், 5 மதிப்பெண்.
இதில், 62வது வினாவில் (தமிழ் வழியில்) ரேடானின் தத்துவம் யாது? அதன் பயன்பாடுகள் யாவை? என, எழுத்து பிழையுடன் இருந்தது.

குழப்பம் : ரேடாரின் தத்துவம் யாது, அதன் பயன்பாடு யாவை என, கேட்டிருக்க வேண்டும். இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
உத்தரவு : இந்த வினாவிற்கு முழு பதில் எழுதியிருந்தாலும் சரி, வரிசை எண், 62 என, எழுதியிருந்தால் கூட, முழு மதிப்பெண் வழங்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...