போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்குறுதி அளித்தபடி கல்வித்துறை வசதிகள் செய்து தராததால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் இதற்கான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கண்காணிப்பில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்மயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஜான்ஸ் பள்ளி மையத்தில் டம்மி விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

 இங்கு சுமார் 500 ஆசிரியர்கள் காலை 8,30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். இங்கு கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நெல்லை மாவட்ட மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் சண்முகபாண்டியன், செயலாளர் பாபுசெல்வன், பிரசார செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என ஏற்கனவே மனு அளித்து இருந்தோம். ஆனால், பாளை. ஜான்ஸ் பள்ளி மையத்தில் காற்றோட்ட வசதி இல்லை, மின் விசிறி பொருத்தப்படவில்லை. கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வியர்வை குளியலில் நனைந்து மனஉளைச்சல் அடைகின்றனர். இதனால் திருத்தும் பணியில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு ‘திருத்தம் இல்லா திருத்தம்‘ என கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது என்றாலும் 2 அல்லது 3 மதிப்பெண் வித்தியாசம் இருந்தாலும் அன்றைய தினம் மாலையே புறப்பட்டு சென்னைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பலரையும் பாதித்துள்ளது. முதலில் அமைதியான மனநிலையில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...