சென்னை பல்கலை முதுகலை தேர்வு: விண்ணப்பிக்க 29ம் தேதி கடைசிநாள்

சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள்,
விண்ணப்பிக்க வேண்டும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ.,-எம்.காம்., - எம்.எஸ்சி., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளுக்கு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு, வரும், 29ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், அபராத கட்டணத்துடன், மே, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை, www.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 8ம் தேதி முதல், முதுகலை பட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் துவங்குகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...