புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை 2ம் வகுப்பு மாணவனுக்கு புகை பழக்கத்தால் பாதிப்பு


சென்னை மாநகரில் 2ம் வகுப்பு மாணவன் புகை பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘புகை நமக்கு பகை’, ‘புகை
பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது’ என்று அரசு தரப்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. புகையிலை தயாரிப்பு பொருட் களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல பொது இடங்களில் புகை பிடித்தால் 200 வரை அபராதம், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ஸீ200 அபராதம் என்று விதிகள் உள்ளன. இருந்தாலும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் சென்னை மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே எடுக்கப்பட்ட சர்வேயில் 2ம் வகுப்பு மாணவனும் புகை பிடிக்கிறான் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அடையாறில் உள்ள புற்றுநோய் தடுப்பு மையம் சார்பில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்த சர்வே ஏற்கனவே நடத்தப்பட்டது. மொத்தம் 15,186 மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் வருமாறு: 10 வயது மாணவர்களில் 2.9 சதவீதத்தினரும், 11 வயது மாணவர்களில் 5.8 சதவீதம் பேரும், 12 வயது மாணவர்களில் 3.7 சதவீதத்தினரும், 13 வயது மாணவர்களில் 2.9 சதவீதத்தினரும், 14 வயதினரில் 2.3 சதவீதத்தினரும் புகை பிடிக்கின்றனர் அல்லது புகையிலை சார்ந்த பொருட்களை வகுப்பறை, வீடு மற்றும் பொது இடங்களில் துணிச்சலாக பயன்படுத்துகின்றனர்.

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பது, கடைகளில் விற்கப்படும் புகையிலை பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு, பெற்றோருக்காக கடைகளுக்கு சென்று பீடி, சிகரெட், புகையிலை வாங்கி வருவதால் நாமும் புகை பிடித்து பார்ப்போம் என்ற உந்துதல், பள்ளியில் சக மாணவர்களோடு ஏற்படும் இறுக்கம் ஆகிய சூழ்நிலைகளால் இளம்பிராயத்தினர் புகை பிடிக்கின்றனர்.

 இவ்வாறு ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் முன்பாக இயங்கும் பெட்டிக்கடைகளில் புகையிலை தயாரிப்பு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தவும், கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களிடையே புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு வந்த 2ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு புகையிலை பொருட்கள் பயன்படுத்தியதால் தோன்றும் பாதிப்புகள் இருப்பதை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த 7 வயது சிறுவன், தனது பெற்றோர் பயன்படுத்தும் அதே வகை புகையிலை பொருளை அறியாமையாலும், ஆர்வக்கோளாறாலும் பயன்படுத்தியிருப்பதை அறிந்த டாக்டர்கள் அவனுக்கு நவீன சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...