மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பிளஸ் 2 ஆங்கிலம் விடைத்தாள்கள் : தவறு ஏற்படும்: அச்சத்தில் ஆசிரியர்கள்

மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பிளஸ் 2 ஆங்கில விடைத்தாள்கள், திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர். இதனால், மறுமதிப்பீட்டின் போது அதிக "தவறு' ஏற்பட
வாய்ப்புள்ளதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த மாதம் துவங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் திருத்தும் பணிக்காக, விடைத்தாள்கள் பாடவாரியாக ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மதுரை மாவட்டத்திற்கு, இந்தாண்டும் ஆங்கில விடைத்தாள்கள் ஒரு லட்சம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விருப்பம் தெரிவிக்காததால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே, ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால், கூடுதல் எண்ணிக்கையில் விடைத்தாள்களை வழங்க வேண்டிய நிலைக்கு, அதிகாரிகள் தள்ளப்படுவதால், திருத்தும் பணியில், அதிகமாக தவறுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு, மொழி பாடங்களின் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில், சில மதுரை ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களில் அதிக மார்க் வித்தியாசம் இருந்தது. இதனால், 70 ஆசிரியர்களுக்கு தேர்வு துறை "நோட்டீஸ்' அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அச்சம்: : இந்நிலையில், மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் ஆங்கில தேர்வு விடைத்தாள்களை, நாள் ஒன்றுக்கு 20 வீதம் திருத்த வலியுறுத்தப்படுகிறது. நிதானமின்றி, திருத்தும் சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுவதால், தவறுகள் அதிகம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது: இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை எட்டரை லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மாநிலத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், மதுரைக்கு மட்டும் ஒரு லட்சம் வரை ஏன் ஒதுக்கப்படுகிறது. கடந்தாண்டு ஒன்றரை லட்சம் வரை ஒதுக்கப்பட்டன. இதுபோன்று பிற மாவட்டங்களில் அதிகளவு எண்ணிக்கை ஒதுக்கப்பட்டால், உயர் அதிகாரிகளிடம் மாவட்ட அதிகாரிகள், அதுகுறித்து பேசி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாள்களை, வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவர்.
ஆனால், மதுரையில் மட்டும் அதுபோன்ற மாற்று நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பதில்லை. இருக்கும் ஆசிரியர்களை வைத்து, பேப்பர்களை திருத்தி, முடிக்கத்தான் நினைக்கின்றனர். தவறு ஏற்பட்டால், ஆசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஆசிரியர்களை கூப்பிட்டு வாங்க... : மதுரையில் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு 236 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டும், ஒரு நாளைக்கு நூறு ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு
வருகின்றனர். ஆசிரியர்களின் சரியான "லிஸ்ட்' அதிகாரிகளிடம் இல்லாததால், திருத்தும் பணிகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், "உங்களுக்கு தெரிஞ்ச ஆசிரியர்களை பணிக்கு கூட்டிட்டு வாங்க, அல்லது
அவர்களின் மொபைல் எண்களை கொடுங்கள்,' என்று அதிகாரிகள் கேட்கின்றனர்.
மேலும், விடுப்பில் உள்ள ஆசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அதிகாரிகள் நேற்று அழைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...