5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி.

10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம்

தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.

ஜிமெயிலில் இருந்து அனுப்ப:

கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File - களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.

புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNvNuC7ktMf83NB567gDDFe6tQ53K3_8ChGOwhqXtoLQarhXuie4j-QPXOy0XZH0zLukPUwPdKIak35v47YcfQkGe5ECQRNgr2WQAUOeTm85irYKy9_tw8FBDE2LZyAWsh9yGEw7cchnk/s1600/insert+file+from+drive.png
ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File - ஐ தெரிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப

முதலில் Google Drive-https://drive.google.com/ தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1RPHshNpR8J-RJ2sZzot2oXr3-m7ivluUuHNMLuDnvtRbAP8P4IK3hb9s4G0ntQXqP57zgwjOLcUsn7ImI1EolKk365tBtzSksZdqVCC5aTnCFltad6MX88wY2CeWxQ5qfnADrSloxXQ/s1600/upload.png
அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு File என்றால் File, நிறைய File என்றால் Folder.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ7aGXtWKgfyHAf_LqOjh0VJ9GwNQDJ4aDQsrHKedmPe220voEfK8_ywKj81k3hajUKnN0Del1qEn6LX70LGWtFsqBjZb8zaQ3wEsWG7Aghyrzm0x4zwhQrCeasfsoCdbcVkl0YRNFFlY/s400/uploading.png
Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder - ஐ நீங்கள் Drive - இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGfs-TtmK-VkF6LV65uS4zA_kA3l4Zo5x9WGdotvSBx0taQRpwwPYk5OnoI2v0aBX_RSBRNcVIk107kK8rdD8DanLys5LD1WRtUOXNkSBtrL5jjZlqYnPfn-tzwO8IivygGm9HDvNzXZc/s1600/share.png
இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File - ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...