அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி "குரூப்' கட்டாயம்

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி "குரூப்' கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட குரூப் கட்டாயம் இருக்கும். ஆனால், மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில்
தான், தொழிற்கல்வி எனப்படும்"ஒக்கேஷனல் குரூப்' இருக்கும்.

பிளஸ் 2 முடித்தவுடன், நேரடியாக வேலைக்கு செல்லும் வகையில், சுய தொழில் துவங்க தொழிற்கல்வி குரூப்பை அனைத்து பள்ளிகளிலும், கட்டாயம் துவக்க வேண்டும், என மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் இந்த குரூப்பில் படித்து,வேலை வாய்ப்பு பெறும் வகையில், நடைமுறை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாடத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், புதிய கட்டடம் கட்டுவதற்கும் , தளவாட பொருட்கள் வாங்குவதற்காக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் சரி பார்த்தல், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 16 வகை பாடப்பிரிவுகள், ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...