விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுமா?

பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளின்போது, மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று
கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்.,18ல் முடிவுறும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், மாநிலத்தில், 66 மையங்களில், நேற்று முதல் துவங்கியது. இப்பணிகளில், 20 ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். "திருத்தும் மையங்களில், போதிய அடிப்படை வசதிகளுடன், திருத்தும் சூழ்நிலைக்கு ஏற்ப வசதிகள் இல்லை' என, ஆசிரியர்கள் மத்தியில் இந்தாண்டும் வழக்கமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை விடுமுறையை குடும்பத்துடன் கழிப்பதற்காக, விடைத்தாள் திருத்தும் பணிக்கு, "விடை' கொடுத்து, சில ஆசிரியர்கள், "எஸ்கேப்' ஆகி விடுவதால், திருத்தும் பணியில், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, கூடுதல் விடைத் தாள்களை கொடுத்து, திருத்த வலியுறுத்துவதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தாண்டு, பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள் துவக்கத்தில், ஆங்கிலம் விடைத் தாள்கள், நாள் ஒன்றுக்கு, 15க்கு பதில், 20 விடைத் தாள்களை திருத்த வற்புறுத்தியதாக, மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில், ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க, மதுரை மாவட்ட செயலர் பிரபாகரன், சட்ட செயலர் வெங்கடேஷ் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளின் போது, ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மின்சாரம் இல்லாத நிலையில், கொட்டும் வியர்வையுடன், விடைத் தாள்களை திருத்த வேண்டியுள்ளது. இதை தவிர்க்க வேண்டும். கூடுதல் தாள்களை திருத்த வலியுறுத்துவதால், மனஅழுத்தம் ஏற்படுகிறது.

தற்போது, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், அதிக எண்ணிக்கையில், ஆசிரியைகள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஏற்ப, வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும், பிளஸ் 2வில் உள்ளது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் நகல், மாணவர்களுக்கு வழங்கும் நடைமுறையை, தேர்வு துறை அமல்படுத்த வேண்டும். இவ்வாற அவர் கூறினார்.

958 ஆசிரியர்கள் விளக்கம்: கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தவில்லை என்று, தமிழகம் முழுவதும், 958 ஆசிரியர்கள் தேர்வு துறையிடம், விளக்கம் அளித்துள்ளனர். மொத்தம், 2,470 மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்ததில், 1611 மாணவர்களுக்கு முன், எடுத்திருந்ததை விட, அதிக மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால், சம்பந்தப்பட்ட விடைத்தாள்களை திருத்திய, 958 ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. "திருத்தும் மையங்களில் நிலவும் சூழ்நிலைகள் தான் இதற்கு காரணம்' என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...