பொருட்டொகுதிப் பெயர்கள்


இருசுடர் - சூரியன், சந்திரன்
இருதிணை - உயர்திணை, அஃறிணை
இருநிதி - சங்கநிதி, பதுமநிதி
இருபிறப்பு - சனனம், உபநயனம்


இருவினை - நல்வினை, தீவினை

முக்கனி - வாழைக்கனி, பலாக்கனி, மாங்கனி
முக்குணம் - ராசசம், தாமசம், சாத்துவீகம்
முச்சங்கம் (அ) முத்தமிழ் சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
முப்புரம் - பொன்மதில், வெற்றிமதில், இரும்புமதில்
முப்பொருள் - பதி, பசு, பாசம்
முப்பொழுது - காலை, உச்சி, மாலை
மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்
மும்மலம் - ஆவணம், கன்மம், மாயை
மும்மூர்த்திகள் - சிவன், திருமால், பிரமா
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்

திரிகரணம் - மனம், வாக்கு, காயம்
திரிமஞ்சள் - மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள்

நால்வர் - அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
நால்வகைப்பூ - நிலப்பூ, நீர்ப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ
நால்வகைப்பொன் - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூதம்
நால்வகையாழ் - பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்
நால் வருணம் - பிரம்மர், சைத்திரியர், வைசியர், சூத்திரர்
நாற்கணம் - வல்லினம், மெல்லினம், இடையினம், உயிரினம்
நாற்கதி - நரகர், தேவர், மனிதர், விலங்கு
நாற்கவி - ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி
நாற்குணம் - (பெண்) : அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
(ஆண்) : அறிவு, ஓர்ப்பு, கடைப்பிடி, நிறை
நாற்படை - யானை, குதிரை, தேர், காலாள்
நான்கு அரண் - காடு, மலை, நீர், மதில்
நான்கு உபாயங்கள் - சாமம், பேதம், தானம், தண்டம்
நான்கு புண்ணியம் - தானம், தவம், கல்வி, ஒழுக்கம்
நான்கு புருடார்த்தம் - அறம், பொருள், இன்பம், வீடு
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
ஐந்து சக்தி - ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி
ஐம்பூதம் - நிலம், நீர், வளி, தீ, வெளி
ஐங்கணை - வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம்
ஐந்திணை-அகம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐந்திணை-புறம் - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை
ஐந்து குற்றம் - அவிச்சை, அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டல கேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் - நாககுமாரகாவியம், உதயணகாவியம், யசோதரகாவியம், சூளாமணி, நீலகேசி
ஐம்படை - சக்கரம், வில், தண்டு, வாள், சங்கு
ஐங்குரவர் - அரசன், தந்தை, தாய், தமையன், குரு
ஐங்காயம் - கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
ஐம்புலத்தார் - பிதிர், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்

பஞ்சவர்ணம் - கருமை, செம்மை, பசுமை, மஞ்சள், வெண்மை
பஞ்சமாபாதகம் - கொலை, களவு கள், பொய், குருநித்தை
பஞ்சலோகம் - இரும்பு, செம்பு, ஈயம், பொன், வெள்ளி
பஞ்சகௌவியம் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம்
பஞ்சகன்னிகை - அகலிகை, மைதிலி, தாரை, துரோபதை, மண்டோதரி
பஞ்சதந்திரம் - அசம்பிரேட்சிய காரித்துவம், அர்த்தநாசம், சந்தி விக்கிரகம், சுகிர் லாபம், மித்திரபேதம்
பஞ்ச வாசனை - இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்
பஞ்சாங்கம் - திதி, வாரம், நாள், யோகம், கரணம்
பஞ்சநாதம் -கஞ்சம், கண்டம், தோல், நரம்பு, தொளை
பஞ்சமூர்த்திகள் - சதாசிவம், உருத்திரன், மகேசுவரன், பிரமா, திருமால்
பஞ்சலிங்கம் - சுயம்புலிங்கம், காணலிங்கம், தெய்விகலிங்கம், ஆரிடலிங்கம், மானிடலிங்கம்

ஆறுபடை வீடு - திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், குன்றுதோறாடல், திருவேரகம், பழமுதிர்சோலை
ஆறு பருவங்கள் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
ஆறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்
ஆறாதாரம் - மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை
ஆறுசுவை (அ) அறுசுவை - கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு

ஏழு பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்

அட்டசித்தி - அணிமா, இலகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்து

எட்டுத் தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை

அட்டலக்குமி - தனலக்குமி, தானியலக்குமி, தைரியலக்குமி, சௌரியலக்குமி, வித்தியாலக்குமி, கீர்த்திலக்குமி, விச்யலக்குமி, இராச்சியலக்குமி

அட்டகிரி - இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்

எட்டுவகை மெய்ப்பாடு - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி

அட்டாங்கயோகம் - இயமம், நியமம், ஆதநம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி

நவக்கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது

நவரத்தினம் - கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், முத்து

நவதானியம் - உழுந்து, பயறு, கடலை, எள்ளு, கொள்ளு, சாமை, தினை, நெல், துவரை

நவரசம் - அற்புதம், இரௌத்திரம், கருணை, இழிவு, சாந்தம், சிங்காரம், பயம், பெருநகை, வீரியம்

நவபேதம் - சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்

பத்துப் பாட்டு - மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், நெடுதல், வாடை, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை

தசாவதாரம் - மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், தசரதராமன், கண்ணன், பலதேவன், கல்கி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...