ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன்
கூறினார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்க படவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையானநடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்' கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...