முரண்பாடாக இருப்பதாக, தேர்வுத்துறையே கருதுகிறது- கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறிய கருத்து


விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு, ரயில் தண்டாவாளத்தில் விழுந்ததில், 63 விடைத்தாள்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த மாணவர்களுக்கு,
மறுதேர்வு கிடையாது என்றும், தமிழ் முதல் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 221 ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருவதாக, கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறிய கருத்து, முரண்பாடாக இருப்பதாக, தேர்வுத்துறையே கருதுகிறது.

தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,"செஞ்சி மாணவர்களுக்கும், மறுதேர்வு தேவையில்லை. ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்கிவிடலாம் என்று தான், அரசுக்கு பரிந்துரை செய்தோம். ஆனால், தற்போது, மறுதேர்வு குறித்து, பரிசீலனை செய்வதாக, அமைச்சர் தெரிவித்திருப்பது எங்களுக்குத் தெரியாது' என, தெரிவித்தன.இரு சம்பவங்களின் தன்மைகள் வேறுபாடாக இருந்தாலும், பிரச்னையும், பாதிப்பும் ஒன்று தான். விருத்தாசலம் சம்பவத்தில், 63 விடைத்தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக, அமைச்சர் கூறி உள்ளார். செஞ்சியில், 221 விடைத்தாள்கள், மாயமாகிவிட்டன. விடைத்தாள் சேதம் அடைந்தவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது; விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு, மறு தேர்வு என, அரசு கூறுவது, ஏற்கனவே நொந்துபோன மாணவர்களை, மேலும் நோகச் செய்துவிடும்.

மேலும், இருசம்பவங்களுமே, மொழிப்பாட தேர்வுகள் தான். விருத்தாசலம், தமிழ் தேர்வு சம்பந்தபட்டது. செஞ்சி சம்பவம், ஆங்கிலம் தேர்வு சம்பந்தபட்டது. இரு தேர்வுகளுமே, தலா இரு தாள்கள் கொண்ட தேர்வாகும். அப்படியிருக்கும்போது, இரு சம்பவங்களுக்கும், ஒரே தீர்வையே, அரசு அறிவிக்க வேண்டும் என்பது, எதிர்பார்ப்பாக உள்ளது.செஞ்சி மாணவர்களுக்கு, மீண்டும் நடத்தப்படும் தேர்வு, கடினமாக அமைந்தாலும், அல்லது மிக எளிதாக அமைந்தாலும், அது, சர்ச்சையைத் தான் உருவாக்கும். எனவே, விருத்தாசலம் மாணவர்களுக்கு வழங்கிய நிவாரணத்தைப்போல், பாதிக்கப்பட்டுள்ள செஞ்சி மாணவர்கள், ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து, முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: விருத்தாசலம் சம்பவமும், செஞ்சி சம்பவமும் வெவ்வேறாக இருந்தாலும்,பாதிப்பு என்னவோ ஒன்று தான். ஒரு தரப்பிற்கு தேர்வு இல்லை என்றும், ஒரு தரப்பிற்கு தேர்வு என்றும் கூறுவது, நியாயமாக இருக்காது. ஏற்கனவே ஒரு தேர்வை சந்தித்து, விடைத்தாள் மாயமானதால், மாணவர்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பர். இந்த நேரத்தில், மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடத்துவது, அவர்களை பெரிதும் பாதிக்கச் செய்துவிடும்.எனவே, செஞ்சி மாணவர்களுக்கும், மறுதேர்வு கிடையாது என, அறிவிப்பதுடன், இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்கி, பிரச்னைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, தங்கம் தென்னரசு கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...