சிறப்பாக ஆசிரியர்கள் பணியாற்றினால், ஆயிரம் குடும்பங்களில் விளக்கு ஏற்றிவைக்க முடியும்

கரூர் எம்.குமாரசாமி கல்வியல் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் எம்.குமாரசாமி கல்வி நிறுவனங்களில் தலைவர் குமாரசாமி தலைமைவகித்தார். கல்லூரி தாளாளர் மோகனரங்கன்,
செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தனர்.இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை, மதுரை மண்டல இயக்குனர் மோகனன், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:இந்தியாவில், கல்லூரிகள் வளர்ச்சியடைய ஆசியர்களின் பணிகள் தான் காரணமாகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்கு ஒப்பிட முடியாத பணியாக ஆசிரியர் பணி விளங்குகிறது. மற்ற எல்லா சொத்துக்களையும் ரூபாய் வாயிலாக மதிப்பிட முடிகிறது. ஆனால் கல்வி எந்த அளவாலும் மதிப்பிட முடியாது. ஆண்டுதோறும், 20 ஆயிரம் பேர் ஆசிரியர் படிப்புகளை முடித்து வெளிவருகின்றனர்.தற்போது மாணவர்கள் மிகவும் அறிவுத்திறன் உள்ளவர்களாக இருக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. படித்து நல்ல வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை.அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து, நன்றாக ஆங்கில பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதைபோல அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் போது சமுக அக்கறை வேண்டும்.மதுரை, கோவை போன்ற நகரங்களை தவிர, பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆங்கில அறிவு குறைவாக இருக்கிறது. ஆங்கிலம் உலகில் பரவலாக பேசப்படும் மொழியாகி விட்டது. இதன் காரணமாக ஆங்கில அறிவு தேவை அவசியமாகிறது.வகுப்புகளில் எல்.சி.டி., திரையில் பாடங்களை ஒளிபரப்பி, நடத்தி விட்டு போவது மட்டுமே ஆசியர்களில் கடமை முடிந்து விடுவதில்லை. ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகளை மாணவர்களுக்கு கற்று தருவது ஆசிரியர்கள் முக்கியமானது. இவர்கள் மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். சிறப்பாக ஆசிரியர்கள் பணியாற்றினால், ஆயிரம் குடும்பங்களில் விளக்கு ஏற்றிவைக்க முடியும். அதேபோல ஒரு தவறான ஆசியர்களால், அந்த வகுப்பு அறையில் உள்ள மாணவர்களில் எதிர்காலம் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கல்லூரியின் இயக்குனர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...