முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்


சென்னை: முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது. இதற்காக, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 14 வரை,
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை வழங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கு தேர்வு நடப்பதால், இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. முந்தைய தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு, விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சென்னை, கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து,அதிக தேர்வர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த மாவட்டங்களுக்கு, அதிகளவில் விண்ணப்பங்களை அனுப்பி உள்ளோம். சம்பளத்திற்கே அதிக நிதி தேர்வுக் கட்டணம், 500 ரூபாயை குறைக்கும் எண்ணம், டி.ஆர்.பி.,க்கு இல்லை. டி.ஆர்.பி.,க்கு, இந்த ஆண்டு தான் அதிகபட்சமாக ,2.25 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பளத்திற்கே, அதிக நிதி செலவாகிவிடுகிறது.இதர செலவுகளை எல்லாம் ஈடுகட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, தேர்வுக் கட்டணத்தை குறைக்க மாட்டோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...