தமிழுக்குப் பெருமை! தமிழ் ஐ.ஏ.எஸ்.

தாய் மொழி தமிழில் பேச, எழுதத் தயங்கும் இனு“றைய இளைஞர்களுக்கு நடுவே, ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதி இந்திய அளவில் 91வது ரேங்க் எடுத்து சிகரம் தொட்டிருக்கிறார் கங்காதரன்.
நெசவு தொழிலாளியின் மகன். சாதாரண குடும்பம். தொடர்ந்து வரும் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தவரை சென்னை அனகாபுத்தூரிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
நான் பிறந்து, வளர்ந்தெல்லாம் இதே ஊரில் தான். இங்குள்ள அரசுப் பள்ளியில் +2 வரைக்கும் தமிழ் மீடியத்தில் படிச்சேன். அப்புறம் இன்ஜியரிங் கல்லூரியில் ஐ.டி. முடிச்சேன். நான் படிச்சப்ப, இன்ஜினீயரிங்ல தமிழ் மீடியம் அறிமுகமாகலை. தொடர்ந்து கல்லூரியில் லெக்சராக வேலை கெடச்சது. அப்பதான் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதினால் என்ன என்கிற எண்ணம். அதுவும் நம் தாய்த் தமிழில் எழுதணும்கிற ஆர்வம். அதன்மூலம் அடுத்தடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வெழுதும் இளைஞர்களுக்கு உதராணமாக இருக்கணும்னு நெனச்சேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு புவியியல் தமிழ் இலக்கியம் இரண்டையும் முக்கிய தாள்களாக நான் தேர்வு செய்திருந்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடி, நூலகத்துக்கு போனபோது ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம் புவியியலில் போதிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இல்லைங்கிறது தான். அதானல நானே ஆங்கிலத்திலிருந்து புவியியல் நூல்களை தமிழில் மொழிபெயர்த்தேன். அதனை நோட்டில் குறித்து வைக்க நீண்ட நாள் பிடிக்கும் என்பதால் எனது செல்போனில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்து வச்சு படிச்சேன்.
தமிழிலக்கியங்களை பாட்டுக்கள் மூலம் முன்னுரை கொடுத்து எழுதினேன். அப்படி எழுதுவது திருத்துபவர் பார்த்தவுடன் புரிந்து கொள்ள உதவும்என்று வழிகாட்டினார்கள். என தனது சிரமங்களை பட்டியலிடும் கங்காதரன். இன்போசிஸ் காக்னிசன்ட் நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியிருக்கிறார்.
குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், திருப்பாவை உள்ளிட்ட தமிழிலக்கிய நூல்களை தேடிப்பிடித்து படிப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தாராம் கங்காதரன்.

நேர்முகத் தேர்வுக்கு தமிழில் தான் பதில் சொன்னீர்களா? : ஆமாம், நேர்முகத் தேர்வுக்குழுவில் தலைவரையும் சேர்த்து ஐந்து பேர் இருப்பார்கள். ஒவ்வொருவராக கேள்வி கேட்பார்கள். மாநில மொழியாக இருந்தால் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் உடனிருப்பார். ஆனால் எனது அதிர்ஷ்டம் தமிழ் தெரிந்தவரே குழுவில் இடம் பெற்றிருந்தது தான். இதில் விசேஷம் என்ன தெரியுமா? முழுக்க தமிழில் தான் பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இடையிடையே ஆங்கிலமும் பயன்படுத்தலாம். தவறில்லை. ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நான் தமிழையே பயன்படுத்தினேன் என்கிறார்.
அவ்வப்போது தனது தந்தை தியாகராஜனுக்கு உதவியாக கங்காதரன் நெசவுசெய்வதும் உண்டாம். வீட்டின்பின்புறம் இருக்கும் தறியில் லுங்கி நெய்து கொண்டிருக்கும் தந்தையை வாஞ்சையுடன் அணைக்கும் கங்காதரன் மாநில அரசின் மையத்தில் பயிற்சி எடுத்திருக்கிறார்.
என் கணவன் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்வார் என்பது எனக்கு முன்பே தெரியும். ஏன்னா அவரோட உழைப்பும், ஈடுபாடும் அப்படி இருந்துச்சு. அதனை நான் நேரில் பார்த்தவள். பளிச் என பதில் தருகிறார் கங்காதரனின் மனைவி. இதற்கிடையே இமாச்சலப் பிரதேசம் முசோரியில் தொடங்கும் பயிற்சிக்கான அழைப்புக்காக காத்திருக்கும் கங்காதரன் தற்போது ஐ.பி.எம். நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்திருப்பது ஹைலைட்.
-எஸ்.அன்வர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...