பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை

பிளஸ்–1 வகுப்புகள்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

பிளஸ்–2 படிப்பில் உள்ள மதிப்பெண்தான் உயர்கல்வியையும், அதைத் தொடர்ந்து வாழ்க்கைத்தரத்தையும் நிர்ணயிக்கிறது. எனவே பிளஸ்–2 படிப்புக்கு அடித்தளமாக அமைவது பிளஸ்–1 வகுப்பு.

இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகராஜன் ஏற்பாட்டில் நன்னெறி பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

இதில் புதிதாக சேர்ந்த பிளஸ்–1 மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இதே பள்ளியில் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்க பணியில் இருப்பவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

டாக்டர் மெலித்தா கிளாடி

அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் டாக்டர் மெலித்தா கிளாடி, அவரது தங்கை என்ஜினீயர் ஏஞ்சலின் ஆகியோர். அவர்கள் இருவரும் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள். அதுமட்டுமல்ல இவர்களின் தங்கை என்ஜினீயர் தபிதாவும் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிதான்.

டாக்டர் மெலித்தா கிளாடி மாணவிகள் மத்தியில் பேசியதாவது:–

நான் இதே பள்ளியில் படித்தேன். எனது அம்மா தமிழ் ஆசிரியை. தந்தை சரத்குமார் டெலிபோன் அலுவலக அதிகாரியாக இருந்தார். வீடு அருகே இருந்ததாலும் அரசு பள்ளியில் படித்து சாதனை படைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் சொன்னார்கள். அதன்படி நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும், பிளஸ்–2 தேர்விலும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன்.

இந்த மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவ–மாணவிகள் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்குதான் தொடக்ககல்வியை முடித்துள்ளார்.

மாணவிகளே இந்த பள்ளியில் தகுதியான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் கற்பிக்கும் பாடங்களை வகுப்பறையிலேயே நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். சந்தேகம் இருந்தால் அப்போதே கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும். வீட்டுக்கு போய் நன்றாக படிக்கவேண்டும்.

ஆரோக்கியமாக இருந்தால்தான் நோய் வராது. நன்றாக படிக்கவும் முடியும். நான் நன்றாக படித்ததால் தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும். எம்.டி. படிப்பை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் படித்து இன்று கிளினிக் நடத்தி வருகிறேன்.

எனவே மாணவிகளே சிரமப்பட்டு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

இவ்வாறு டாக்டர் மெலித்தா கிளாடி பேசினார்.

ஆசிரியை திலகவதி பேசியதாவது:–

தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்

நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறேன். மாணவிகளே உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போது சாலை விதிகளை கடைபிடித்து போக்குவரத்தை மட்டும் மனதில் கொள்ளுங்கள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

படிக்கும்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கவனத்தை எந்த நேரத்திலும் சிதறவிடாதீர்கள். கவனச்சிதைவுதான் நமது லட்சியத்தை அடையவிடாமல் தடுக்கும். நீங்கள் தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.

இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...