20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை

இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும்,
விண்ணப்பித்துள்ளனர்.


பயிற்சி நிறுவனங்கள்:


தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. விண்ணப்பித்த அனைவருக்கும், "சீட்' உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன. குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, திருச்சியில், கலந்தாய்வு நடந்தது. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், திருச்சிக்கு சென்று வந்தனர். தற்போது, முதல் முறையாக, "ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வு நடக்க இருப்பதால், மாணவர்கள், தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள, சி.இ.ஓ., அலுவலகத்திற்கு சென்றால் போதும். கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், ஓரிரு நாளில் வெளியிட உள்ளது.

ஏன் இந்த நிலை?


ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பவர்கள், ஐந்தாம் வகுப்பு வரையான பள்ளிகளில், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றலாம். ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி இடங்கள், மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அப்படியே, தேர்ச்சி பெற்றாலும், மாநில அளவில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், வேலை கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, ஆசிரியர் பயிற்சி படிப்பை, மாணவர்கள், ஒதுக்கியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...