தூத்துக்குடியில் 200 கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்திய 2 வயது சிறுவன் சாதனைக்கு தயாராகி வருகிறான்

தூத்துக்குடியில் 2 வயது சிறுவன் 200 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி வருகிறான்.
2 வயது சிறுவன்
தூத்துக்குடி லயன்ஸ்டவுன் மினிசகாயபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ஜெனோ. இவர்களின் மகன் சேவியர் ரிஜாய் (வயது
2). சிறுவன் சேவியர் ரிஜாய் அதிக ஞாபக சக்தி கொண்டவராக திகழ்ந்து வருகிறான். இந்த சிறுவன் சுமார் 200 பொது அறிவு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில்களை தெரிவித்து அசத்துகிறான்.
தமிழ்நாடு வரலாறு, இந்திய வரலாறு, உலக வரலாறு, கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பிரிவிகளிலும் உள்ள கேள்விகளுக்கு பதில் பளீரென பதில் அளிக்கிறான். எந்த விதமான கேள்விகளை மாற்றி கேட்டாலும் சரியாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது:–
சாதனை நோக்கி...
சேவியர் ரிஜாய் சிறுவயதில் இருந்தே அதிக ஞாபக சக்தி கொண்ட சுட்டிப்பையனாக திகழ்ந்து வருகிறான். சுமார் 1½ வயது இருந்த போது, பொது அறிவு தொடர்பான கேள்வி பதில்களை மகனுக்கு சொல்லிக் கொடுத்தோம். அப்போது சொல்லிக் கொடுப்பதை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொண்டான். இதனால் தினமும் பொது அறிவு கேள்விகளை கற்றுக் கொடுத்து வந்தோம். தற்போது 2 வயது 3 மாதம் ஆகிறது. அதற்குள் சுமார் 200 கேள்விகளுக்கு சரளமாக, எப்படி மாற்றி கேட்டாலும் தெளிவாக பதில் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான்.
இதனால் சாதனைக்காக சேவியர் ரிஜாயை தயார்ப்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பு 5 வயது சிறுவன் 285 கேள்விகளுக்கு பதில் அளித்ததே சாதனையாக இருந்து வருகிறது. சேவியர் ரிஜாயிக்கு 5 வயது ஆகும் போது 500 கேள்விகளுக்கு மேல் சரளமாக பதில் அளிக்க முடியும். அதற்காக தயார்ப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு பெற்றோர் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...