2,881 ஆசிரியர் பணிக்கு 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்!


ஆயிரத்து 881 ஆசிரியர் காலி பணி இடங்களுக்கு இதுவரை 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூட்டம்
அலைமோதியது. முன்பெல்லாம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தகுதி மற்றும் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தேர்வில் வெற்றி பெறுவதற்கான முழு முயற்சிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது, 2881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்ததில் 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடைசி நாள் என்பதால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க ஆர்வத்துடன் பல ஆசிரியர்கள் வந்தனர். சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பம் பெறப்பட்டது. இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் 10-க்கும் மேற்பட்ட மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் மேற்பார்வையில் 30 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மற்ற மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...