ஆங்கில வழி கற்றல் திட்டத்தில் கூடுதலாக ஒன்பது அரசுப்பள்ளிகள்

பொள்ளாச்சிப்பகுதியில், ஆங்கில வழி கற்றல் திட்டத்தில் கூடுதலாக ஒன்பது அரசுப்பள்ளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளை போலவே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கற்றல் முறையை, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அறிமுகப்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 102 அரசு நடுநிலைப்பள்ளிகளும், 98 அரசு துவக்கப்பள்ளிகளும் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களும் உள்ளடங்கும். இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 20 பள்ளிகள் ஆங்கில வழி கற்றல் முறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டது. இதில் பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மேலும் சில பள்ளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் கீழ் வடக்கிப்பாளையம், ஆர்.கோபாலபுரம், ராமப்பட்டிணம், நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளிகளும், நெகமம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளி என ஐந்து பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்பட்டியலில் தற்போது புதிதாக போடிப்பாளையம் நடுநிலைப்பள்ளியும், குள்ளக்காபாளையம், காளிபாளையம், புளியம்பட்டி, கோவிந்தனூர், பணிக்கம்பட்டி துவக்க பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் ஆறு பள்ளிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 11 பள்ளிகளில் ஆங்கில வழி கற்றல் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாயக்கன்பாளையம், மாக்கினாம்பட்டி, கஞ்சம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, செம்பாகவுண்டர் காலனி அரசு நடுநிலைப்பள்ளி என மொத்தம் 6 பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது. மேலும், அம்பராம்பாளையம் நடுநிலைப்பள்ளி, நேதாஜி நகரவை துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணா நகரவை நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 9 பள்ளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு, வடக்கு ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பூம்பாவை, ஜோசப் கூறுகையில், ""தெற்கு ஒன்றியத்தில் ஆவல்சின்னாம்பாளையம், சமத்தூர், கோலார்பட்டி, ஊத்துக்குளி உள்ளிட்ட 12 பள்ளிகள் புதிதாக சேர்க்கப்படவுள்ளன. வடக்கு ஒன்றியத்தில் ஆசிரியர்கள் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு பின் கூடுதலாக பள்ளிகள் சேர்க்கப்படும்,'' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...