அரியாப்பாடி கிராமத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடம் நடத்தும் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் அரியாப்பாடி தொடக்க பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ரேணுபிரகாஷ் ஒரு குழுவை அமைத்தார்.

இந்த குழுவினர் கிராமத்தில் வீடுவீடாக சென்று பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து பேசினர். அப்போது மற்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாமல் நமது கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். தனியார் பள்ளி போன்று இங்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள், தரமான கல்வி, சீருடைகள் குறித்து விளக்கினர். அதன்படி இந்த ஆண்டு புதிதாக 56 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பச்சையப்பன், சிவானந்தம் ஆகியோரிடம் கூறி தற்காலிகமாக கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பள்ளியில் 6 மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவு வழங்குவதற்கு அனுதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக சேர்க்கப்பட்ட 56 மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க வாய்ப்பு இல்லை. எனவே ஊராட்சி மன்ற தலைவர் ரேணுபிரகாஷ் மற்றும் சிலர் சேர்ந்து தங்கள் சொந்த செலவில் சமைத்து மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் ரேணுபிரகாஷ் பி.எட் படித்துள்ளதால் அவர் காலை முதல் மாலை வரை கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார். அவருடன் பொறுப்பு ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகியோரும் கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...