தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்கள் சார்பாக கோரிக்கைகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நடந்தவை-ஒரு தொகுப்பு

சென்னை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்கள் சார்பாக கோரிக்கைகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது சுமார் மாலை 6.30 மணியளவில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறைச்செயலர்,இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்
தலைமயில் துவங்கியது கூட்டத்தில் ஒவ்வொரு இயக்கத்திற்கும் சில நிமிடங்களே  ஒதுக்கப்பட்டு முக்கிய கோரிக்கைகளை மட்டும் பேச அனுமதி அளிக்கப்பட்டது.அதில் சில இயக்கங்கள் எதிர்க்கட்சி சார்பாக கலந்து கொண்டது போல் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப்பற்றி பேசாமல் கட்சி சண்டை போல் பேசி மற்ற இயக்கங்களின் பொன்னான நேரத்தினை வீணடித்தார்கள்.அமைச்சரும் செயலரும் பல முறை கேட்டும் வீணான விவாதம் தொடர்ந்தது அதில் இரண்டு ஆசிரியர் மட்டும் மத்திய ஆசிரியர்களுக்குஊதியத்தை குறித்து சில வார்த்தைகளை குறிப்பிட்டனர்.மற்றவர்கள் அது குறித்தும் பேசவில்லை.இதில் மிகப்பெரிய வேதனை 2009க்குப்பின்னர் நியமிக்கப்பட்டவர்களின் வேதனைகளையும்,கண்ணீர்களையும் குறித்து ஒருவர் கூட பேசவில்லை.இப்படிப்பட்டவர்களிடம் ஆங்காங்கே இருக்கும் 2009 நியமனம் ஆசிரியர்கள் கேட்க்க மறுப்பது ஏன்?பயமா ?அல்லது அறியாமையா?

 நேரம் 9 மணியை எட்டியதுமே,மீதம் உள்ள இயக்கங்களின் கோரிக்கைகளை பிறகு பார்க்கலாம் என்று கூறி அமைச்சர் கூட்டத்திற்கு வருகை புரிந்ததற்கு நன்றி எனக் கூறி முடிக்கப்பார்த்தார்.ஆனால் SSTA மாநிலப் பொறுப்பாளர்கள்,நானும் சேர்ந்து எங்களின் கோரிக்கைகளை கேட்டே ஆகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினோம்.பின்னர் அமைச்சர் என்னிடம் வந்து கூறுங்கள்,எனக்கூறினார்.நாம் அவரிடம் சென்று நம்முடைய மாவட்ட மாறுதல்மற்றும் ஊதிய முரண்பாட்டை பற்றி கூறினோம்.ஆனால் வழக்கமான பதில்தான் வந்தது.நமக்காக நாம்தான் போராடவேண்டும் என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

நாம் உருவாகிய இயக்கம் SSTA மட்டுமே நமக்கான உரிமையை பெற்றுத்தர முடியும்.அதற்கு ஒரே களம் போராட்டம் தான் !!!மாவட்ட மாறுதலையும்,ஊதிய வித்தியாசத்திலும் வெற்றி பெற போராட்ட களம் காண சரியான நேரம் இதுதான்.சிந்திப்பீர்!!! ஒன்று படுவோம் !!!போராடுவோம் !!!போராட்டம் விரைவில்!!!வெற்றி அருகில் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...