டாப்சிலிப் மலைவாழ் அரசு பள்ளியில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடக்கிறது

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் உள்ள மலைவாழ் அரசு உறைவிட நடுநிலை பள்ளி உள்ளது.
ஒன்றுமுதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் டாப்சிலிப், கோழிக்கமுத்தி, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடம் நடத்தும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. 6, 7 மற்றும் 8ம் வகுப்பு என தனித்தனியாக பாடம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் 15 பள்ளிகளில், ஒயில்ட்விங்ஸ் தன்னார்வ அமைப்பு சார்பில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் டாப்சிலிப்பில் உள்ள உறைவிட நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பவரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கான பாடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடம் நடத்தப்படுவது, மாணவர்களுக்கு உபயோகமாக உள்ளது “ என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...