தெளிவு இல்லாத அரசு உத்தரவால் இலவச கல்வி திட்டத்தில் குழப்பம்-dinamalar

இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் உத்தரவில், புத்தகம், சீருடை, பஸ் உள்ளிட்ட இதர கட்டணம் குறித்து,தெளிவுபடுத்தப்படாததால், "குழப்பம்' ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மெட்ரிக் பள்ளிகளின் ஒழுங்குமுறை கமிஷன், நுழைவு வகுப்பில் (எல்.கே.ஜி), 25 சதவீதம் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க உத்தரவிட்டது. கடந்த 2009 ல், அறிவிக்கப்பட்ட இத்திட்டம், கல்வித்துறையாலும், மெட்ரிக் பள்ளிகளாலும், மக்களிடம் சென்றடையவில்லை.
இதனால், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்கள் இடையே இல்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல், இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில், ஒவ்வொரு பள்ளியும் சேர்த்துக் கொள்ள வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை கல்வித்துறையே அறிவித்துள்ளதால், மக்கள் இத்திட்டத்தில் ஆர்வத்துடன் சேரத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்வித்துறையின் உத்தரவில், கல்வி கட்டணம் தவிர்த்து புத்தகம், பஸ், சீருடை கட்டணங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த கட்டணங்களை யார் செலுத்துவது, என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பள்ளிகள் இலவசமாக வழங்கும் கல்விக்கான கட்டணத்தை, பின்னர் அரசே அப்பள்ளிகளுக்கு வழங்கிவிடும். இதே போல், புத்தகம், சீருடை, பஸ் கட்டணத்தையும் அரசே வழங்க வேண்டும், என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...