ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறை வேண்டும் கருணாநிதி அறிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைவருமே 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உயர்நீதிமன்றத்தில் தமிழ்கேள்வி:- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12-7-2013 அன்று தமிழில் வாதாட நீதிபதி அனுமதி மறுத்ததை பற்றி 15-7-2013 தேதி விரிவாக எழுதியிருந்தீர்கள். அதற்கு பிறகு அதே நீதிபதி தனது உத்தரவை திரும்ப பெற்று தமிழில் வாதாட அனுமதி அளித்திருக்கிறாரே, இது உங்களுக்கு கிடைத்த வெற்றிதானே?பதில்:- தமிழுக்கு கிடைத்த வெற்றி. நீதிபதியை குறையாக எதுவும் சொல்லவில்லை. அவரே அரசியல் அமைப்பு சட்டப்பிரிவை எடுத்துச்சொல்லி உச்சநீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பினை விளக்கியிருந்தேன். தமிழ் உணர்வு படைத்த வக்கீல்கள் குரல் கொடுத்தனர்.நீதிபதியும், பிடிவாதம் காட்டாமல், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறி, தமிழில் வாதாட அனுமதிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இதையே முன்மாதிரியாக கொண்டு உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி அனைவரும் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்.ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகேள்வி:- சான்று சரிபார்ப்பு ஏற்கனவே முடித்தவர்கள் டி.இ.டி. தேர்வு (தகுதித்தேர்வு) எழுத தேவையில்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?பதில்:- 2010-ம் ஆண்டு மே மாதத்திலேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லாமல், பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி, 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர்களை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டுமென்று வற்புறுத்தாமல், பணியில் நியமிக்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி உண்மையாக இருக்குமேயானால் அது ஆசிரியர்களுக்கு எதிராக இந்த அரசு எடுக்கின்ற முடிவாகவே இருக்கும்.தகுதிதேர்வில் இடஒதுக்கீடுகேள்வி:- ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு முறை வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் அரசு அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லையே?பதில்:- கனிமொழி எம்.பி.யும் இதைப்பற்றி கட்டுரை எழுதியிருந்தார். 7-6-2013 அன்று நானும் எழுதியிருக்கிறேன். ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருமே 60 சதவிகித மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.இது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான அறிவிப்பாகும். தமிழகத்தில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக 60 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சரியில்லை. தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கை தமிழகத்தில் பின்பற்றாத காரணத்தால், பாதிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.குமரவேலு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, நீதிபதி அரி பரந்தாமன், “வழக்கில் உள்ள நியாயத்தை மறுக்கவில்லை, ஆனால் இதற்கு முன்பு நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பில் இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்று கூறியுள்ளதால், இந்த மனுவினை தள்ளுபடி செய்கிறேன்” என்று தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால் எத்தனையோ வழக்குகளில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்புக்கு மாறாக மற்றொரு நீதிபதி தீர்ப்பளித்திருப்பதை கண்டிருக்கிறோம். எனவே இந்த பிரச்சினையில் இடஒதுக்கீட்டு கொள்கை பற்றிய முக்கியத்துவம் கருதி, டிவிஷன் அமர்வில் மேல்முறையீடு செய்யப்போவதாக செய்தி வந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். படுகொலைக்கு கண்டனம்கேள்வி:- அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கொலைகள் நின்ற பாடில்லையே?பதில்:- சேலத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த படுகொலையை தி.மு.க. சார்பில் வன்முறையாக கண்டிப்பதோடு, மறைந்த ரமேஷின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.நீரில் பெட்ரோலிய பொருட்கள்கேள்வி:- தண்டையார்பேட்டையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீரில் பெட்ரோலிய பொருட்கள் கலந்து வருவதாக புகைப்படங்களோடு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறதே?பதில்:- அந்த பகுதியில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், ஒருநாள் முழுவதும் அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமாக பெட்ரோலிய பொருள்களை அந்த பகுதிகளில் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதற்கு தடை விதித்திருக்கிறார். எம்.பி.யும், மத்திய மந்திரியும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மாநில அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...