பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு:

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில், பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும் நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஆண்டில் இருந்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும், மாநில அளவில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும், காலாண்டுத் தேர்வு, மாநில அளவில், பொதுத் தேர்வாக நடக்கும் என, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, பிளஸ் 2, காலாண்டுத் தேர்வுகள், செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வுகள், செப்., 12ல் துவங்கி, 20ம் தேதி வரையும் நடக்கின்றன. மார்ச், ஏப்ரலில் நடத்தப்படும் பொதுத் தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும் என்பதால், மாணவர்களுக்கு, இது, நல்ல பயிற்சியாக அமையும். பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:15 மணிக்கு துவங்கி, 1:15க்கு முடியும். முன்னதாக, காலை, 10:00 மணி முதல், 10:10 வரையிலான, 10 நிமிடம், கேள்வித்தாளை படித்து, புரிந்துக்கொள்ள வழங்கப்படும்.

அடுத்த, ஐந்து நிமிடம், விடைத்தாளில், மாணவர் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்விலும், முதல், 15 நிமிடம், மேற்கண்ட முறையில் அமல்படுத்தப்படும். விடை எழுதுவது, 10:15 மணிக்கு துவங்கி, 12:45 மணிக்கு முடிவடையும்.

பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மணவர்களும், பிளஸ் 2 தேர்வை, எட்டு லட்சம் மாணவர்களும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்கள், தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், செப்., இறுதிக்குள் தெரியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...