3 மாதத்தில் முடிவு வெளியீடு குரூப் 4 தேர்வு 2 லட்சம் பேர் ஆப்சென்ட் கருத்துகள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி., எழும்
பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார் பார்வையிட்டனர். நவநீத கிருஷ்ணன் அளித்த பேட்டி:

குரூப் 4 தேர்வு எழுத 14 லட்சத்து 10 ஆயிரத்து 57 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சுமார் 12 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை தேர்வு எழுதவில்லை. குரூப் 4 பணிக்காக  நடத்தப்பட்ட தேர்வில் இவ்வளவு பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளது இதுவே முதல் முறையாகும். இது வரலாற்று சாதனையாகும்.

இவ்வளவு பேர் தேர்வு எழுதிய போதும் தேர்வு நேர்மையாகவும், அமைதியாகவும், எந்த வித குறைபாடு இல்லாமலும் நடந்து முடிந்துள்ளது. பதற்றமானதாக கருதப்பட்ட 139 தேர்வு கூடங்கள் ‘வெப் கேமரா‘ மூலம் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டது.

நேர்மையாகவும், வெளிப்படையாகவும், எந்த வித தவறும் நடக்காமல் விடைத்தாள் திருத்தப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். முறைகேடு நடந்து விடுமோ? என்று அச்சப்பட தேவையில்லை. விடைத்தாள் திருத்தப்பட்டு விரைவில், அதாவது 3 மாதத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நவநீத கிருஷ்ணன் கூறினார்.  தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது: பொது தமிழ் வினாவில், ‘ சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுதலில், தமிழ் படித்தால் எது பெருகும்?, உலகம் என்ற தமிழ் சொல்லின் வேர்ச்சொல் எது? உள்ளிட்ட எளிமையான கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டிருந்தன. அதே போல், பொது அறிவில் அதிகமான வினாக்கள் எளிதாக இருந்தது. மேலும், கணிதத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்த கேள்விகள் கடினமாக இருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுவதில் அதிகம் நேரம் பிடித்தது என்றனர்.

கீ ஆன்சர் இன்று வெளியீடு

குருப் 4 தேர்வுக்கான விடைத்தாள்(ஆன்சர் கீ) இணையதளத்தில் இன்று அல்லது நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளமான   www.tnpsc.gov.in, www.tnpscexams.net வெளியிடப்படும். அதை பார்த்து தேர்வாளர்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வில் 4 விதமாக ஏ, பி, சி, டி என்ற அடிப்படையில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு தேர்வாளர்களுக்கு வழங்கப்படும். காப்பி அடிப்பதை தடுக்க, முதலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வினாத்தாள் அருகில் உள்ளவர்களுக்கு மாறுபட்டு இருக்கும். ஆனால், நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் ஒரே விதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வினாத்தாள் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு எழுத இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...