ஆசிரியர் தகுதி தேர்வில் மோசடி: கைதான 5 பேர் சிறையில் அடைப்பு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் வழங்குவதாக கூறி பணம் பறித்து மோசடி செய்தது தொடர்பாக கணபதி, எஸ்தர், இளையராஜா, அசோகன், கிருஷ்ணப்பா,
சந்திரசேகரன் ஆகிய 6 பேரை போலீசார் கடந்த 17–ந் தேதி கைது செய்தனர்.
இவர்களுக்கு வினாத்தாள் தொடர்பான தகவல்கள் எப்படி கிடைத்தது? இவர்கள் பணம் பெற்றவர்களுக்கு வினாத்தாள் வழங்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த வினாத்தாள் மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனை தொடர்ந்து அரூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ், வெங்கடாசலம், வெங்கட்செல்வம், சீனிவாசன், ரமேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த மோசடி குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...