பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு


பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது. அனைத்துப்
பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை, பள்ளிக்கு வரவழைத்து, பெயர் பட்டியல்கள் தயாரிப்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவர் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, ரேஷன் கார்டு எண், ஆதார் அடையாள அட்டை எண் உட்பட, 11 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் தவறு ஏற்படாமல் இருக்க, மாணவரின் தந்தை, வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரின் கையெழுத்துடன், இந்தாண்டு புதியதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரையும், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கேட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...