ஏமாறவேண்டாம் !!!

ஒரு ரூபாய் என்றாலும் நம்மை பொறுத்தவரை  நம் குடும்பத்தை பிரிந்து,நம் உறவுகளை பிரிந்து  நம் ரத்தத்தை காட்டிலும் உயர்ந்ததாக கருதுகிறது SSTA .நம்மைத்தவிர வேறு யாரும் இன்று வரை நம்முடைய உச்ச நீதி மன்ற வழக்கில் எட்டிப்பார்க்கவில்லை. ஏதோ ஒரு கும்பல் நாங்கள் தான் வழக்கை நடத்துகிறோம் எனக்கூறி பணம் வசூலில் இறங்கயுள்ளது என கேள்விப்பட்டு வேதனை நெஞ்சை பிளக்கிறது.பணம் குறுக்கு வழியில் சம்பாதிக்கக் கூடாது என போதிக்கும் நிலையில் உள்ள சமுதாயத்தில் இப்படிப்பட்ட கும்பல் உள்ளாது என கேள்விப்படவே வெட்கமாக உள்ளது.உச்ச நீதிமன்ற வழக்கில் மாவட்ட மாறுதல் சார்பாக  யாரும் நுழையவில்லை என்பதற்கு அதிகாரப்பூர்வமான ஆதாரம் எங்களிடம் உள்ளது.நாங்களும் ,மாவட்ட பொறுப்பாளர்களும் எங்களையே வெறுத்து ,ஒருவிதமான வெறித்தனத்துடன் போராடி வெற்றியை நெருங்கும தருணத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் தீய சக்திகளிடம் ஏமாறவேண்டாம். அப்படியே, அவர்கள் நாங்கள் தான் வழக்கில் நடத்துகிறோம் என கூறினால்,அதற்கான தாள்களை காண்பிக்க சொல்லுங்கள். நம் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் யார்வேண்டுமானாலும் வழக்கின் இன்றைய நிலையை அறியலாம். நீங்களே கூகுளில் சென்று SUPREME COURT CASE STATUS என டைப் செய்தால் வரும் விலாசங்களில் சென்று CASE STATUS என்ற க்ளிக் செய்து 18227 /18228 -2008 என்பதை SUBMIT செய்தால்,யார் வேண்டுமானாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நாள் முதல்,இன்றுவரை நடந்த அனைத்தும் நீங்கள் பார்த்துவிடலாம்.அவ்வாறு நாங்களும் இவ்வழக்கில் உள்ளோம் என அக்கும்பல் கூறுவார்களாயின் அவர்களது வழக்கறிஞர் தாக்கல் செய்த AFFIDAVIT COPY யை கேளுங்கள்.இதில் எதுவுமே இல்லை என்றால் தாராளமாக காவல்துறையில் COMPLAINT செய்யுங்கள். பணம் வசூலிக்கும் கும்பலில் யாரும் நம்மை போன்று பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது .
எனவே ,நீங்கள் கேட்க வேண்டியவை ,
1.வழக்கறிஞர் விவரம்
2.வழக்கறிஞர் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட AFFIDAVIT COPY
3.அரசு கடைசியாக 05.04.2013 அன்று தாக்கல் செய்யப்பட்ட 84 பக்க COPY 
4.நமது வழக்கின் அடிக்கட்டை விபரம்
5. வழக்கறிஞர்களுக்கு வழக்கு செலவிற்கான  பணம் செலுத்தியதற்கான ரசீதின் முன் பக்கம்.
போன்ற விவரங்களை கேளுங்கள்.இவை அனைத்தும் ஓரிரு நாளில் நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சுவது போல் ,நம் நிலையை பணமாக்கும்  முயற்சியயை முறியடிப்போம்.வெற்றிபெறுவோம் !!!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.இதுவரை நாம் ஏமாற்றப்பட்டது போதும்.இனிமேலும் ஏமாறாதீர்கள் ஆசிரிய பேரினமே !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...